அரிய வகை நீர்நாய் பிடிபட்டது


அரிய வகை நீர்நாய் பிடிபட்டது
x
தினத்தந்தி 29 May 2021 1:19 AM IST (Updated: 29 May 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே அரிய வகை நீர்நாய் பிடிபட்டது/

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்டது, பழைய நெடுவயல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தட்டான் கண்மாய் பகுதியில் நாய் போன்ற தோற்றத்துடன் வித்தியாசமான 2 விலங்குகள் சுற்றித்திரிவதாக அந்த கிராம மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.புதூர் வனத்துறை அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்து அந்த கண்மாயில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து அங்கு சுற்றித்திரிந்தது அரிய வகை உயிரினமான நீர்நாய்கள் என்பது தெரியவந்தது. அவற்றை பிடிக்க முயன்றபோது அதில் ஒன்று தப்பியோடியது. மற்றொன்றை வனத்துறையினர் பிடித்து கயிறு மூலம் கட்டி மேலே தூக்கி வந்தனர். அந்த நீர்நாயை திருப்பத்தூர் அருகே மண்மலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, “நீர் நாய் மெலிந்த நீண்ட உடல் அமைப்பை பெற்று நீரில் நீந்தி செல்லும் தன்மை உடையது. 2 அடி முதல் 6 அடி வரை நீளமும், 45 கிலோ எடை கொண்டதாக இருக்கும். மனிதர்களை கண்டால் வேகமாக ஓடி ஒளிந்து கொள்ளும். கீரிப்பிள்ளை போன்ற தோற்றம் உடையது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது” என்றனர்.

Next Story