கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை திரும்ப வழங்க வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
தேவகோட்டை,
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது முந்தைய அ.தி.மு.க. அரசு. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. கூட்டுறவு சங்கங்களும் நகைகளை அடகு வைத்திருந்த விவசாயிகளுக்கு நகை கடன் தள்ளுபடி ஆகி விட்டது என அதற்கான அத்தாட்சி சீட்டையும் அனுப்பி விட்டது. அதற்குள் திடீரென தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. ஆகவே, தள்ளுபடிக்கான சீட்டு கைக்கு வந்தும் விவசாயிகளுக்கான நகை வந்து சேரவில்லை. அந்த நகைகளை மீட்டு, மீண்டும் அடகு வைத்து, கடனாக பணம் பெற்றுத்தான், இந்த நெருக்கடி நேரத்தில், விவசாயம் செய்ய வேண்டிய நிலையில், விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் வைத்துள்ள நகைகளை தள்ளுபடி அறிவிப்பு கொடுத்த பிறகும் இன்னும் அவர்களுக்கு நகைகளை திருப்பி கொடுக்கவில்லை. கூட்டுறவு அதிகாரிகள் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட அடகு நகைகளை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story