சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 929 பேர் பாதிப்பு 23 பேர் பலி
கொரோனாவுக்கு 929 பேர் பாதிப்பு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 929 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 987 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 929 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 248 பேர் அடங்குவர்.
ஓமலூரில் 75 பேர், எடப்பாடியில் 56 பேர், காடையாம்பட்டியில் 55 பேர், தலைவாசலில் 53 பேர், வீரபாண்டியில் 49 பேர், கொங்கணாபுரத்தில் 48 பேர், தாரமங்கலத்தில் 37 பேர், சேலம் ஒன்றியத்தில் 32 பேர், மேச்சேரி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 27 பேர், சங்ககிரியில் 26 பேர், கொளத்தூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 25 பேர், மகுடஞ்சாவடியில் 23 பேர், நங்கவள்ளி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 22 பேர், ஏற்காட்டில் 20 பேர், ஆத்தூரில் 19 பேர், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 14 பேர், அயோத்தியாபட்டணத்தில் 11 பேர், நரசிங்கபுரத்தில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 572 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 6,483 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 160-க் கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
23 பேர் பலி
சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story