முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு


முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும்  கொரோனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2021 4:30 AM IST (Updated: 29 May 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு

சேலம்:
முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று கலெக்டர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவ காப்பீட்டு திட்டம்
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவசமாக மருத்துவ சேவைகளை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான தொகுப்பு வீதம் தற்போது உள்ள தொற்று காலத்தில் பொதுமக்கள் நலன் காத்திடவும், கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடவும் திட்ட பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இந்த கட்டணம் முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் இதர பொதுமக்கள் இருவருக்கும் பொருந்தும். சிகிச்சை பெற விரும்புவோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். மேலும் மருத்துவ விருப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது
காப்பீட்டு அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது பயன்பாட்டில் உள்ளதா என்று அறியாவிட்டாலோ? அவர்களது பழைய அல்லது புதிய குடும்ப அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் உள்ள காப்பீட்டு தொடர்பு அலுவலர் அல்லது மாவட்ட திட்ட அலுவலர் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு காப்பீட்டு அட்டை நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. 
பொதுமக்களை பொறுத்தவரை மேற்கூடிய கட்டணம் பொதுபடுக்கை வசதிகளுக்கும் மட்டுமே பொருந்தும். தனியறை மற்றும் பிற வசதிகள் கொண்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மேலும் ஆக்சிஜன் இல்லாத சிகிச்சைகளுக்கு மாநகராட்சி எல்லைக்குள் ஏ1, ஏ2 தர ஆஸ்பத்திரிகள் கூடுதலாக ரூ.2,500 காப்பீடு இல்லாத இதர பொதுமக்களிடம் கட்டணமாக பெறலாம்.
புகார் தெரிவிக்கலாம்
நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலோ, முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story