பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது


பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 May 2021 4:31 AM IST (Updated: 29 May 2021 4:31 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

ஓமலூர்:
ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி சேத்துபாதை அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் குப்புசாமியின் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி உள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே, அவர்களை அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரபாவதி விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் அணைமேடு பவளத்தானூர் பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 29), கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் (22) என்பது தெரியவந்தது. 
மேலும் அவர்கள் பண்ணப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்கண்ணன் என்பவரது செல்போனையும், அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தம்மாள் என்பவரது செல்போனையும் திருடிகொண்டு சேத்துபாதையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் குப்புசாமியிடம் செல்போன் திருடிய போது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதியழகன், பூபாலன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story