போலீசார் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்
போலீசார் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு ராமசாமிநகரில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு போலீசார் சார்பில் அரிசி, மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், கருப்பதுரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் கலந்து கொண்டு முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல எரியோடு பாண்டியன்நகர், ஆர்.புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர், முதியோர், ஆதரவற்றவர்களுக்கும், நாகம்பட்டியில் நாதஸ்வரகலைஞர்களுக்கும், புதுரோடு பகுதியில் நாடக கலைஞர்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story