கொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்


கொரோனா தொற்றால் உயிரிழந்த  கிறிஸ்தவ பெண்ணின் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்
x
தினத்தந்தி 29 May 2021 8:06 PM IST (Updated: 29 May 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் த.மு.மு.க.வினர் உடலை அடக்கம் செய்தனர்.

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் நேற்று கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்து தருமாறு உறவினர்கள் வத்தலக்குண்டுவில் உள்ள த.மு.மு.க.வினரை கேட்டுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கொரோனாவால் இறந்தவரின் உடலை கிறிஸ்தவ மத வழக்கப்படி த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர். மதங்களை கடந்த அவர்களின் மனித நேயத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்

Next Story