வத்தலக்குண்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய போலீஸ் ஏட்டு


வத்தலக்குண்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய போலீஸ் ஏட்டு
x
தினத்தந்தி 29 May 2021 8:11 PM IST (Updated: 29 May 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு போலீஸ் ஏட்டு உதவினார்.

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பசியுடனும், உடல் நலம் பாதிக்கப்பட்டும் சுற்றித்திரிவதாக  வத்தலக்குண்டு போலீஸ் ஏட்டு முத்துஉடையாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் ஏட்டு அங்கு சென்று, சவர தொழிலாளி ஒருவர் உதவியோடு அந்த முதியவருக்கு முடி வெட்டி, சவரம் செய்ய ஏற்பாடு செய்தார். பின்னர் அவர் அந்த முதியவரை குளிக்க வைத்து, மாற்று உடை அணிவித்து, தலைக்கு எண்ணெய் தேய்த்து, உணவு வழங்கி கணவாய்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
இதுதவிர அந்த பகுதியில் சாலையோரங்களில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு போலீஸ் ஏட்டு முத்துஉடையார் தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். காக்கி சட்டைக்குள் இருந்த கருணை உள்ளத்தை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பிரமுகர்கள் பாராட்டினர்

Next Story