கோவில்பட்டி உதவி கலெக்டரிடம், காய்கறி மாலையுடன் வந்து மனு கொடுத்த காங்கிரசார்
கோவில்பட்டி உதவி கலெக்டரிடம், காய்கறி மாலை அணிந்து வந்து காங்கிரசார் மனு கொடுத்தனர்.
கோவில்பட்டி, மே:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி, கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை ஆகியோர் காய்கறி மாலை அணிந்து வந்து உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், இளையேரச னேந்தல், எட்டயபுரம், பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் தோட்ட பயிர்களாக பயிரிடுகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கில் காய்கறிகள் அனைத்தும் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை மூலம் நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும். அல்லது விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை மக்களிடம் விற்க அனுமதிக்க வேண்டும். விலை ஒரே சீராக இருக்க அரசு கண்காணிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story