கொரோனா தடுப்பூசி முகாம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
அடைக்கலாபுரம், வீரபாண்டியன்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர், மே:
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம், வீரபாண்டியன்பட்டணத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்று அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை திருமண மண்டபத்தில் நடந்த தடுப்பூசி முகாமை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் தடுப்பூசி போட்டு கொண்ட பெண்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
அதேபோல் வீரபாண்டியன்பட்டணம் தூய மரிய அன்னை தொடக்கப் பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் அடைக்கலாபுரம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஊர் பொதுமக்களுக்கு 2 ஆயிரம் முககவசம் வழங்கினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, தாசில்தார் முருகேசன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அஜய், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம், அடைக்கலாபுரம் பங்கு தந்தை பீட்டர் பால், ஊர் தலைவர் ராபர்ட், செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் சுபி பாலன், மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story