கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு காய்கறி, பழங்கள்
திருச்செந்தூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர், மே:
திருச்செந்தூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களாக செயல்படும் போலீசாருக்கு அவர்களது பணியை பாராட்டும் வகையிலும், ஊக்கப்படுத்தவும் காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய் போன்றவற்றை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் வழங்கினார். தாலுகா போலீஸ் நிலையம், கோவில் போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீசார், ஊர் காவல்படையினர் என 125 பேருக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி துரைசிங்கம், கல்யாணராமன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெபசீலன், பிராங்ளின், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் துரைசிங், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், செந்தூர் நண்பர்கள் நல அறக்கட்டளை பொருளாளர் கார்க்கி, திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார், செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story