மூதாட்டி தீக்குளித்து சாவு


மூதாட்டி தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 29 May 2021 9:21 PM IST (Updated: 29 May 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து இறந்தார்.

கோவில்பட்டி, மே:
கோவில்பட்டி புதுரோடு காளியப்பர் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி மீனாட்சி அம்மாள் (வயது 84). இவர் கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை யில் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் மீனாட்சி அம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் செந்தில்குமார் (50), கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story