வேலூர் மாவட்டத்தில் 367 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் 367 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 May 2021 9:30 PM IST (Updated: 29 May 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 367 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வாரம் தினமும் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். 

ஆனால் தற்போது 400-க்கும் கீழ் கொரோனா குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 395 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் 367 பேருக்கு கொரோனா உறுதியானது. 

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 40 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 493 பேர் குணமடைந்துள்ளனர். 

3 ஆயிரத்து 775 பேர் மருத்துவமனைகள், வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 690 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story