கொரோனா தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம், மே:
ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் சண்முகத்தாய் தலைமை தாங்கினார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மருத்துவ அலுவலர் தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்ட்ரூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற முன்கள பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலர்கள், தாங்கள் பணிபுரியும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் தயக்கம் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி போடும் நபர்கள் இரண்டாவது முறை தடுப்பூசி போடும் நாள் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் குறிப்பேட்டை மருத்துவப் பணியாளர்கள் வழங்கிடும் வகையில் வருவாய்த்துறை சார்பில் அச்சடிக்கப்பட்ட விபரக்குறிப்புகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story