குமராட்சி, நெல்லிக்குப்பத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரம்


குமராட்சி, நெல்லிக்குப்பத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 May 2021 10:38 PM IST (Updated: 29 May 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

குமராட்சி, நெல்லிக்குப்பத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காட்டுமன்னார்கோவில்,


காட்டுமன்னார் கோவில், குமராட்சி பகுதிகளில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள்  முழுவீச்சில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில்  திருநாரையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் உதய குமார் தலைமையில், அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ள அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் அங்கன்வாடி பணியாளர்கள் தேவி, தமிழ் ஒளி, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் அறிவுக்கரசி, கிராம உதவியாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வீடுவீடாக சென்று பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

லால்பேட்டை

இதேபோல்  லால்பேட்டை பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வீடுகள் தோறும் சென்று, யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று கண்டறிந்து கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. 

பேரூராட்சி செயல் அலுவலர் ஜேம்ஸ்டிசாமி தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியை கண்காணிப்பு அலுவலர் ரவிச்சந்திரன் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி பணியாளர் செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று யருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமையில் துப்புரவு அலுவலர் சக்திவேல் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து  வருகிறது. 

இப்பணியின் போது, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை, பல்ஸ்ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவு ஆகியவையும் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

இதில் யாருக்கேனும் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அவரது தகவல்கள் சுகாதாரத்துறைக்கு  தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கு வேண்டிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story