ஊரடங்கை மீறி தாயம் விளையாடிய 10 பேர் மீது போலீசார் வழக்கு


ஊரடங்கை மீறி தாயம் விளையாடிய 10 பேர் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 29 May 2021 10:58 PM IST (Updated: 29 May 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் முழு ஊரடங்கை மீறி தாயம் விளையாடிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று 6-வது நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதை மீறி வெளியே சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஊட்டியில் லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ் சந்திப்பு, பிங்கர்போஸ்ட், மத்திய பஸ் நிலையம், காபிஹவுஸ் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து வாகன சோதனை செய்து வருகிறார்கள். 

வாகனங்களில் செல்கிறவர்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்கிறார்களா என்று கேட்டறிகின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அமர்ந்து, சிலர் தாயம் விளையாடி கொண்டு இருந்தனர். இதை அறிந்த போலீசார் நேரில் சென்று முழு ஊரடங்கை மதிக்காமல் ஒன்று கூடி தாயம் விளையாடிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் சிலர் பால், மருந்து, மாத்திரைகள் வாங்க செல்வதாக கூறி கமர்சியல் சாலையில் நடந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதற்கிடையில் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story