டாஸ்மாக் கடையில் திருடியவர் கைது


டாஸ்மாக் கடையில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 29 May 2021 11:29 PM IST (Updated: 29 May 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையில் திருடியவர் கைது

அன்னூர்

கோவை மாவட்டம் அன்னூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காக்காபாளையம் அரசு டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ.91 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் கடந்த 26-ந் தேதி இரவு நடந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் கடை மேலாளர் தவமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை போலீசார் பச்சாபாளையம் மதுபானக்கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில், அவர் சூலூர் செங்கந்துறையில் வசிக்கும் மதுரையை சேர்ந்த சங்கிலி என்ற சின்னதம்பி என்பவரின் மகன் சக்திவேல் என்பதும், அவருடன் 3 பேர் சேர்ந்து காக்காபாளையம் டாஸ்மாக் மதுபான கடையில் திருடியது தெரியவந்தது. 

இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story