தூய்மை பணியாளர்கள் போராட்டம்


தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 May 2021 11:38 PM IST (Updated: 29 May 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 91-வது வார்டில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 27-ந் தேதி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

 இவருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் ஈமச்சடங்குத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. 

இதை கண்டித்து நேற்று காலை 91 மற்றும் 92-வது வார்டு களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது பணிகளை புறக்கணித்து 91-வது வார்டு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த வந்த சுகாதார ஆய்வாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த் தை நடத்தி, உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு உடனடியாக ஈமச்சடங்குத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story