திருச்செங்கோடு பகுதியில் மின்தடை புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு
திருச்செங்கோடு பகுதியில் மின்தடை புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் பானுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செங்கோடு மின் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு, உஞ்சனை, ஏமப்பள்ளி, இளநகர், மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் தடையில்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் எதிர்பாராத காரணங்களால் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி, செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திருச்செங்கோடு மின் கோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 1912, 180042519124 மற்றும் 94983 25201, 94983 25205 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் திருச்செங்கோடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொதுமக்கள் 94459 79417, 94458 52545, 94458 52546, உஞ்சனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் 94458 52545, ஏமப்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் 94458 52546, இளநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் 94458 52547, மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் 94458 52548 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story