இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 May 2021 12:40 AM IST (Updated: 30 May 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

பேட்டை அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பேட்டை:

பேட்டையை அடுத்த மேல திருவேங்கடநாதபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 60). இவருடைய தம்பி ஆவுடையப்பன் (50). இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்தது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இசக்கி, அவரது மகன் திருப்பதி மற்றும் ஆவுடையப்பன், அவரது மகன்கள் குமார், பூல்பாண்டி ஆகியோருக்கு இடையே ேமாதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து ஆவுடையப்பன் கொடுத்த புகாரின் பேரில் இசக்கி, திருப்பதி ஆகியோர் மீதும், இசக்கி கொடுத்த புகாரின் பேரில் ஆவுடையப்பன், குமார், பூல்பாண்டி ஆகியோர் மீதும் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story