கொடைக்கானல் அருகே தேவையின்றி கூட்டமாக சுற்றித்திரிந்த 14 பேருக்கு கொரோனா பரிசோதனை
கொடைக்கானல் அருகே தேவையின்றி கூட்டமாக சுற்றித்திரிந்த 14 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பெரும்பாறை:
கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பண்ணைக்காட்டை சேர்ந்த 11 வாலிபர்கள் மற்றும் 3 பெண்கள் ஊரடங்கு விதிகளை மீறி 10 மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி கூட்டமாக வந்தனர்.
அப்போது அவர்களை கண்டதும் அதிகாரிகள் மறித்தனர். உடனே அவர்கள் வாகனங்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பியோடினர். இதை பார்த்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், வனப்பகுதிக்குள் ஓடிய 14 பேரையும் விரட்டி பிடித்தனர்.
பின்னர் அவர்களை பண்ணைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, கொரோனா பரிசோதனை ெசய்ய டாக்டர்களுக்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் பரிந்துரை செய்தார். அதையடுத்து அவர்கள் 14 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர்.
பின்னர் பிடிபட்ட 11 வாலிபர்களும் கொடைக்கானலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த 3 பெண்களும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பிடிபட்டவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் அவர்கள் வந்த 10 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story