மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட 11 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,099 பேருக்கு தொற்று உறுதியானது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,099 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிதாக 1,099 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 54,946 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 10,619 பேர் உள்ளனர். 1,297 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 43,791 ஆகும்.
இளம்பெண் உள்பட 11 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 28 வயது இளம்பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இற ந்தவர்களில் 4 பேர் பெண்கள், 7 பேர் ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் 28 வயதுக்கு மேல் 81 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்தது.
504 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 102, சாதரண படுக்கைகள் 388 மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 14 படுக்கைகள் என மொத்தம் 504 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பூரண குணமாகி வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கான காலி படுக்கைகளும் அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story