மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை பரிசோதித்து கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for testing those who come out in violation of the rules

விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை பரிசோதித்து கொரோனா தடுப்பூசி

விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை பரிசோதித்து கொரோனா தடுப்பூசி
ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறி வெளியே வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்து, கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

வாகனங்களில் செல்கின்றனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவம் மற்றும் இறப்பு உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகரில் ஊரடங்கையொட்டி பல்வேறு சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தளர்வுகளில்லா முழு ஊரடங்கின் 6-வது நாளான நேற்றும் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பலர் தொடர்ந்து செல்லும் நிலை இருந்தது. போலீசார், வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வரும் பொதுமக்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டும், பொதுமக்கள் ெவளியே வருவதை நிறுத்தவில்லை. எனவே விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
2. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் யோகி பாபு
நடிகர் யோகி பாபு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
3. ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) போடப்படுகிறது.
4. பாம்பனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
பாம்பனில் சுகாதாரத்துறையின் சார்பில் நடந்த சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
5. கரூருக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு; நீண்ட வரிசையில் அமர்ந்து பொதுமக்கள் போட்டு கொண்டனர்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிகளவில் வருவதால் கரூருக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனை நீண்ட வரிசையில் அமர்ந்து பொதுமக்கள் போட்டு கொண்டனர்.