ஈரோடு மாவட்டத்தில் 1,743 பேருக்கு கொரோனா பாதிப்பு; 7 பேர் பலி- 14 ஆயிரத்து 400 பேருக்கு சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 14 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 14 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று குறையாமல் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றும் புதிதாக 1,743 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 144 ஆக உயர்ந்தது. இதில் 38 ஆயிரத்து 426 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,301 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 14 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
7 பேர் பலி
இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 59 வயது பெண்ணும், 81 வயது முதியவரும் கடந்த 10-ந் தேதியும், 69 வயது முதியவர் 24-ந் தேதியும், 46 வயது ஆண் 27-ந் தேதியும், 66 வயது முதியவர், 66 வயது மூதாட்டி, 69 வயது முதியவர் ஆகியோர் நேற்று முன்தினமும் பலியானார்கள்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 318 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story