மாவட்ட செய்திகள்

சேலம், தலைவாசல் பகுதிகளில்சாராய வழக்கில் 12 பேர் கைது + "||" + 12 arrested in alcohol case

சேலம், தலைவாசல் பகுதிகளில்சாராய வழக்கில் 12 பேர் கைது

சேலம், தலைவாசல் பகுதிகளில்சாராய வழக்கில் 12 பேர் கைது
சாராய வழக்கில் 12 பேர் கைது
சேலம்:
சேலம், தலைவாசல் பகுதிகளில் சாராய வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராய விற்பனை
சேலம் மாநகர் பகுதியில் சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். சேலம் அழகாபுரம் பசுவகல் குண்டத்து மேடு என்ற பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊறல்கள் அழிப்பு
இதேபோல் கோம்பப்பட்டி அருகே உள்ள முட்புதரில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலை அடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு சாராயம் ஊறல்கள் போட்டு காய்ச்சிக் கொண்டிருந்த கவுரிபுரம் பகுதியை சேர்ந்த முத்தையன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டதுடன் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன.
வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீலாவரி ஏரி மற்றும் கொம்பேரிக்காடு பகுதிகளில் சாராயம் விற்ற பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (34), செந்தில்குமார் (23), சரவணன், (26), கணபதி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 42 சாராய பாக்கெட்டுகள், 2 மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல வெள்ளாளப்பட்டி பாம்பன்கரடு பகுதியில் சாராயம் விற்ற மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த மணி (27) என்பவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தலைவாசல்
தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தியதாக கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (30), வேப்பம்பட்டி அருண்பாண்டியன் (29), சித்தேரியை சேர்ந்த அரவிந்த் (27),  பூபதி (28),  அசோக்குமார் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 200 லிட்டர் சாராயம்  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.