கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது


கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 6:27 AM IST (Updated: 30 May 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி மாயாண்டி காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 22). இவருக்கும், மயிலாப்பூர் ரோட்டரி நகர் 15-வது தெருவைச் சேர்ந்த திலீப்குமார் (23) என்பவருக்கும் இடையே கேரம் விளையாட்டு போட்டியில் முன்பகை இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பிரகாசிடம், திலீப்குமார் மற்றும் அவரது நண்பர்களான ராஜேஷ் (23), விக்னேஷ் (24) ஆகிய 3 பேரும் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக திலீப்குமார், ராஜேஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story