கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் விற்பனையாளர் பலி


கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் விற்பனையாளர் பலி
x
தினத்தந்தி 30 May 2021 6:42 AM IST (Updated: 30 May 2021 6:42 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் விற்பனையாளர் பலி.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூரை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவர், மதுராந்தகம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

ஏற்கனவே அச்சரப்பாக்கத்தை அடுத்த அமைந்தங்கருணையை சேர்ந்த டாஸ்மாக் கடை மேலாளர் ரமேஷ் என்ற புருசோத்தமன் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பலியானது குறிப்பிடத்தக்கது.

Next Story