சாலையில் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கி பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை
சாலையில் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கி பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை.
சென்னை,
கொரோனா தடுப்பு ஆயுதமாக முககவசம் கருதப்படுகிறது. எனவே முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் முககவசம் அணியாத குற்றத்துக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் மீது போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் தனித்தனியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் வடசென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை இணை போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி நேற்று ரோந்து சுற்றி ஆய்வு செய்தார். அப்போது அவர், சாலையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.

Related Tags :
Next Story