கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் விற்பனையாளர் உயிரிழந்தார்
கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் விற்பனையாளர் உயிரிழந்தார்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூரை சேர்ந்தவர் முரளி (வயது 43). மதுராந்தகம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த பிரபாகரன் (54) செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த நிர்மலன் (56) ஆகியோர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story