மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டார பகுதி அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் 145 படுக்கைகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டார பகுதி அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் 145 படுக்கைகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், பவுஞ்சூர், செய்யூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சில நாட்களுக்கு முன்பு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்து தர ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று மதுராந்தகம், பவுஞ்சூர், செய்யூர் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் பயன்படும் வகையில் 145 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்கள்
அப்போது மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு திட்ட இயக்குனர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி, காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், பாபு, மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமி பிரியா மற்றும பலர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் எம்எல்.ஏ. பாலாஜி ஏற்பாட்டில் திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்கள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story