வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி


வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 30 May 2021 4:35 PM IST (Updated: 30 May 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் தாசில்தார் வைதேகி தலைமையில் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா, வட்டவழங்கல்அலுவலர் சீத்தாராமன், மண்டல துணை தாசில்தார் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நடமாடும் வாகனங்களில் காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்களில் வைத்து விற்பதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே மளிகை பொருடிகள் விற்பனை செய்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சியை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும் என தாசில்தார் கூறினார்.

Next Story