பேரணாம்பட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி. மகனும் இறந்த பரிதாபம்


பேரணாம்பட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி. மகனும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 30 May 2021 5:51 PM IST (Updated: 30 May 2021 5:51 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சிகிச்்சை பலனின்றி இறந்தார். அவருடைய மகனும் தொற்றுக்கு இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேரணாம்பட்டு

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி கிருபாவதி (வயது 66). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. 

கடந்த 23-ந் தேதி இவர்களது மகன் வைரம் என்ற வைரமுத்துவுக்கு (38) கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அதன்பி்றகு அவருடைய தாயாரான ஒய்வு பெற்ற தலைமையாசிரியை கிருபாவிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருபாவதியும் கடந்த 27-ந் தேதியன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தாய்- மகன் பலி

இந்த நிலையில் கிருபாவதி மற்றும் மகன் உடல்நிைல ஆபத்தான கட்டத்தை எட்டியது. நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கிருபாநிதி இறந்தார். அதே மருத்துவமனையில் மகன் வைரமுத்துவும் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாயும், மகனும் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர் எழிலரசி என்பவரும் அவரது தாயார் பாப்பம்மாளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அடுத்த சிலநாட்களிலேயே தாய்- மகன் இறந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story