மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டத்தில் இதுவரை 1,308 வாகனங்களில் 358 டன் காய்கறி, பழங்கள் விற்பனை - தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தகவல் + "||" + 358 tonnes of vegetables and fruits sold in 1,308 vehicles so far in Nagai district - Deputy Director of Horticulture Information

நாகை மாவட்டத்தில் இதுவரை 1,308 வாகனங்களில் 358 டன் காய்கறி, பழங்கள் விற்பனை - தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தகவல்

நாகை மாவட்டத்தில் இதுவரை 1,308 வாகனங்களில் 358 டன் காய்கறி, பழங்கள் விற்பனை - தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தகவல்
நாகை மாவட்டத்தில் இதுவரை 1,308 வாகனங்களில் 358 டன் காய்கறி-பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலா தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்,

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மருந்தகம், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் பழங்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது.

அதன்படி நாகை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்டவைகள் சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் 1,308 வாகனங்கள் மூலம் தினந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 24-ந் தேதியில் இருந்து இதுவரை 1,308 வாகனங்களில் 358 டன் பழங்கள், காய்கறிகள், பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலா தெரிவித்துள்ளார்.