மாவட்ட செய்திகள்

டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலி - 1,973 பேருக்கு தொற்று உறுதி + "||" + In Delta, Corona killed 15 more people - 1,973 confirmed infected

டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலி - 1,973 பேருக்கு தொற்று உறுதி

டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலி - 1,973 பேருக்கு தொற்று உறுதி
டெல்டாவில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியானார்கள். 1,973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 2,065 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 760 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 7,631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 506 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 563 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 743 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 652 ஆக உயர்ந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 2 பேர் ‌ பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 188 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 5,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் நேற்று 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 562 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 709 ஆக உயர்ந்தது. தற்போது 5,238 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.