தூத்துக்குடியில் சூதாடிய 4பேர் கைது


தூத்துக்குடியில் சூதாடிய 4பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 8:28 PM IST (Updated: 30 May 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தூத்துக்குடி போல்டன்புரம் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த சந்தியாகு (வயது 52), போல்டன்புரத்தை சேர்ந்த திலீப்குமார் (39), ஜேசுராஜ் (44), மாரிமுத்து (43) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story