தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமீறிய 591 பேருக்கு அபராதம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமீறிய 591 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 May 2021 8:32 PM IST (Updated: 30 May 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமீறிய 591 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத 528 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 63 பேருக்கும் மொத்தம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story