மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது + "||" + arrest

கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது

கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது
கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி, 
கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தின் அருகே வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தினர் கடந்த மே மாதம் 9-ந் தேதி கோவிலுக்கு வந்து பூஜை செய்து விட்டு, பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து மே மாதம் 13-ந் தேதி கோவிலுக்கு சென்ற நிர்வாகிகள் அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கமுதி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்தநிலையில்  கருப்பசாமி மற்றும் சிறுவன் ஒருவனை பிடித்து விசாரித்ததில் திருட்டை ஒப்புகொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.