18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம் 2-வது நாளாக பொதுமக்கள் ஏமாற்றம்


18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம் 2-வது நாளாக பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 30 May 2021 10:22 PM IST (Updated: 30 May 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் 2-வது நாளாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு
கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
2-வது நாளாக பொதுமக்கள் ஏமாற்றம்
திருச்சி, 
திருச்சியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் 2-வது நாளாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கானவர்களை உயிர் பலி வாங்கி இருப்பதால் அதனை தடுத்து நிறுத்துவதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளம் வயதினரும் அதிக அளவில் உயிரிழந்து இருப்பதால் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபம், மாநகராட்சியின் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களிலும் இந்த தடுப்பூசி போடும் பணி ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு சென்றனர்.

தற்காலிகமாக நிறுத்தம்

இந்நிலையில் நேற்று முன்தினம் கலையரங்கம் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி போடுவதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த 5 மையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படவில்லை. 
முகாம் நடைபெற்ற இடங்களில் ‘கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்காக வந்த பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story