மாவட்ட செய்திகள்

நீர்வரத்து குறைந்த மூலவைகை ஆறு + "||" + The watershed is low-lying in moolavaigai

நீர்வரத்து குறைந்த மூலவைகை ஆறு

நீர்வரத்து குறைந்த மூலவைகை ஆறு
மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தால் இன்னும் சில நாட்களில் மூல வைகை ஆறு முழுமையாக வறண்டு விடும் நிலையில் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏப்ரல், மே மாதங்களில் மூலவைகை ஆறு வறண்டு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் வரை மூலவைகை ஆற்றில் சிறிதளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மூல வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும் அடுத்த சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே இந்த ஆண்டு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியுள்ளது.