மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி + "||" + 5 killed for corona

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். மேலும் 540 பேருக்கு ெதாற்று உறுதி ெசய்யப்பட்டது.
திருவண்ணாமலை-

5 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றினால் நேற்று ஒரே நாளில் 540 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அதுமட்டுமின்றி 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். மாவட்டத்தில் நேற்று வரை  மொத்தம் 40 ஆயிரத்து 836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 32 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 
தற்போது 7 ஆயிரத்து 754 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 411 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

போளூர்

போளூர் பேரூராட்சியில் 9 பேருக்கும், சுற்றுப்புற கிராமங்களில் 21 பேருக்கும் என 30 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 5 மற்றும் 9 வயது சிறுவர்கள், 9 வயது ஒரு சிறுமி பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.