மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது + "||" + Arrested

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது
காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 6 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
காரைக்குடி,

காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 6 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

காரைக்குடி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இளம்பெண் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக 2 குழந்தைகளுடன் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.

கொரோனா விடுமுறை காலம் என்பதால் வீட்டிலேயே இருந்து வருகிறார். தினமும் அவரது மகளான 4½ வயது சிறுமி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விளையாடுவது வழக்கம்.
சம்பவத்தன்று மாலை சிறுமி மொட்டை மாடிக்கு சென்று விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தாள்.இரவு தனது தாயோடு சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றாள். அப்போது தாயிடம் எனக்கு உடலெங்கும் ஒரே வலியாக உள்ளது என்று கூ.றியுள்ளாள். இது குறித்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது இவர்கள் வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் சையத் அகரம் (வயது 21) என்பவரும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

6 பேர் கைது

இதுகுறித்து சிறுமியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த சையத் அகரம், அப்துல் முகமது யாகூப் (19), நாகூர்கனி (23) போலீஸ் காலனி மேற்கு பகுதியை சேர்ந்த யூசுப் அன்சாரி (19) வ.உ.சி. ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (21) மீனாட்சி புரத்தைச் சேர்ந்த சுலைமான் (21) ஆகிய 6 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது
சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. பட்டாசு தயாரித்த வாலிபர் கைது
வெம்பக்கோட்ைட அருகே பட்டாசு தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. சூதாடிய 5 பேர் கைது
சிவகாசி பகுதியில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.