மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம் + "||" + corona death

குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம்

குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம்
குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம் அடைந்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரவணன். இவருக்கு கடந்த 8-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக கடந்த 19-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொரோனா தொற்றுக்கு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.