மாவட்ட செய்திகள்

பழுதடைந்த தரைமட்ட பாலம் சரிசெய்யப்படுமா? + "||" + Ground bridge

பழுதடைந்த தரைமட்ட பாலம் சரிசெய்யப்படுமா?

பழுதடைந்த தரைமட்ட பாலம் சரிசெய்யப்படுமா?
பழுதடைந்த தரைமட்ட பாலம் சரிசெய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நெய்தலூர் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லவதற்கு 4 வீதிகள் உள்ளன. இதனால் அந்த வீதிகளில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காவல்காரன்பட்டி -நெய்தலூர் மெயின் ரோட்டில் இருந்து இந்திராநகர் மேற்கு பகுதிக்கு செல்லும் வழியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் செல்வதால் தரைமட்ட பாலத்துடன் கூடிய சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. தற்போது அந்த பாலம் பழுதடைந்து அதில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக பழுதடைந்த பாலத்தை அதிகாரிகள் சரி செய்வார்களா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.