கரூர் வடக்கு காந்திகிராமத்தில் உள்ள மைதானத்தில் விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்படுமா?
கரூர் வடக்கு காந்திகிராமத்தில் உள்ள மைதானத்தில் விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்
விளையாட்டு மைதானம்
கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லைநகர் நேதாஜி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊர்புற நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தின் அருகே உள்ள காலி இடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பொதுமக்கள், வாலிபர்கள் நடபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேதமடைந்த உபகரணங்கள்
மேலும் சிறுவர்கள் விளையாட இரும்பு சறுக்குள், ஊஞ்சல்கள் உள்பட பல்வேறு உபகரணங்கள் உள்ளன. இதில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். தற்போது அந்த உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்ததால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே உடனடியாக விளையாட்டு மைதானத்தில் சேதமடைந்த உபகரணங்கள் சரிசெய்யப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story