கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்


கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 30 May 2021 6:47 PM GMT (Updated: 30 May 2021 6:47 PM GMT)

கரூர் காகித ஆலை சமுதாயக்கூடத்தில் 156 ஆக்சிஜன் படுக்கையுடன் கட்டப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

நொய்யல்
கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
கரூர் மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 
அதன்படி புகளூர் காகித ஆலை சமுதாயக் கூடத்தில் 156 ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை உருவாக்க  மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து தொழிலாளர்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்து கொரோனா சிறப்பு மையத்தை உருவாக்கி தயார் நிலையில் உள்ளது.
முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்
சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குத்துவிளக்கேற்றி சிறப்பு சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு விடுகிறார். இதில் அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவுடன் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சென்று கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.

Next Story