பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் உணவுத் தேவைப்படுவோரின் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்பு நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, இலவச உணவு வழங்கி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் உத்தரவுபடி, கரூர் மாவட்டத்தில் உணவுத்தேவைப்படும் ஏழை, எளிய மக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளபதி கிச்சன் மூலம் 3 வேளையும் உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உணவுத்தேவைப்படுவோர் 9498747644, 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாது, கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story