பூட்டி கிடந்த அச்சகத்தில் தீ விபத்து
சிவகாசியில் பூட்டி கிடந்த அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் நூர் முகம்மது என்பவருக்கு சொந்தமான அச்சகம் உள்ளது. இங்கு தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான அட்டைப்பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கையொட்டி அச்சகம் மூடிக்கிடந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த அச்சகத்தின் உள்ளே இருந்து புகை வந்ததை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அச்சகத்தின் உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு முழுமையாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story