மாவட்ட செய்திகள்

கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு + "||" + A person is infected with black fungus

கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு

கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு
பெரம்பலூர், மே.31-
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் குன்னம் தாலுகாவை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருப்பதாக கூறி, உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார். ஆனால் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு
நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
3. புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைநோய்க்கு மேலும் ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் இறந்தார்.
4. கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன
கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
5. தமிழகத்தில் 921 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.