சார்வாய் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


சார்வாய் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 31 May 2021 3:34 AM IST (Updated: 31 May 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

தலைவாசல்:
தலைவாசல் ஒன்றியம் சார்வாய் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமுதா, ஊராட்சி செயலாளர் சிவக்குமார், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், முககவசமும் வழங்கப்பட்டது.

Next Story