மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி ஒரே நாளில் 486 பேர் பாதிப்பு + "||" + corona increases

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி ஒரே நாளில் 486 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி ஒரே நாளில் 486 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கடந்த 25-ந் தேதி ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

அதே போல 52 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 27-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். 59 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 5-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 20-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 57 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

486 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 731 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 ஆயிரத்து 282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் 26 ஆயிரத்து 879 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 208 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி 207 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி 207 பேர் பாதிப்பு
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்
3. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 242 பேர் பாதிப்பு வாலிபர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 242 பேர் பாதிப்பு வாலிபர் உயிரிழப்பு
4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - ஒரே நாளில் 411 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி மேலும் 455 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி மேலும் 455 பேர் பாதிப்பு